போலீஸ் ஸ்டோரியை ‘டிக்’ செய்த விஜய்சேதுபதி!

போலீஸ் ஸ்டோரியை ‘டிக்’ செய்த விஜய்சேதுபதி!

செய்திகள் 20-Mar-2015 9:43 AM IST Chandru கருத்துக்கள்

இடம் பொருள் ஏவல், மெல்லிசை, புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய் படங்களின் ரிலீஸை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி தற்போது தனுஷ் தயாரிப்பில் நயன்தாராவுடன் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அவர், ‘பண்ணையாரும் பத்மினி’யும் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்த ‘பண்ணயாரும் பத்மினி’ படம் வசூல்ரீதியாக பெரிய அளவில் சாதிக்கவில்லையென்றாலும் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்களிடத்திலும் வெகுவாகப் பாராட்டுக்களைப் பெற்றது. இப்படத்தில் பத்மனி கார் ஒன்றை ஓட்டும் டிரைவராக நடித்திருந்தார் விஜய்சேதுபதி. ஆனால், இந்தமுறை விஜய்சேதுபதியை வைத்து அருண்குமார் இயக்கவிருக்கும் படம் ஆக்ஷன் படமாம். அதிலும் போலீஸ் ஸ்டோரியாம். ஏற்கெனவே ‘சூது கவ்வும்’ படத்தில் போலீஸ் யூனிஃபார்மை திருட்டுத்தனமாக விஜய்சேதுபதி மாட்டியிருந்தாலும், அருண்குமார் இயக்கும் படத்தில்தான் அதிகாரபூர்வ போலீஸாக களமிறங்கவிருக்கிறார். இந்த படத்தை 'வாசன் மூவீஸ்' என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை தினேஷ் கிருஷ்ணன் ஏற்றுள்ளார். இசை அமைக்கும் பொறுப்பினை நிவாஸ் கே.பிரசன்னா ஏற்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;