கௌரவ கொலையை செய்யும் நிஜ டாக்டர்!

கௌரவ கொலையை செய்யும் நிஜ டாக்டர்!

செய்திகள் 19-Mar-2015 11:53 AM IST VRC கருத்துக்கள்

சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் இயக்கியுள்ள படம் ‘சரித்திரம் பேசு. இப்படத்தில் மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன் வில்லத்தனமான கதாநாயகனாக நடித்துள்ளார். ‘பதினெட்டாம் குடி’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த யோகேஸ்வரன் போஸ் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். இளம் ஜோடிகளாக கிருபா, கன்னிகா அறிமுகமாகும் இப்படத்தில் ‘பசங்க’ படத்தில் சிறுமியாக நடித்த தாரணி யோகேஸ்வரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜெகதீஷ், வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்திருக்க, இசை அமைப்பாளர் தேவாவிடம் கிடாரிஸ்டாக பணியாற்றிய ஜெயகுமார் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் ஸ்ரீமகேஷ் கூறும்போது,

‘‘நான் சரத்குமாரை வைத்து ‘சத்ரபதி’ படத்தை இயக்கினேன். இப்போது இயக்கியுள்ள ‘சரித்திரம் பேசு’ வேறுவிதமான கமர்ஷியல் படம். இந்த படத்தில் கௌரவத்திற்காக கொலை செய்கிற கொடூர வில்லன் பாத்திரத்தில் நிஜ டாக்டரான சரவணனை நடிக்க வைத்ததில் எனக்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர் சரவணனை நிழலில் வில்லனாக காட்டுகிறோம் என்று! இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் என்னை அழைத்து சென்று உயிர் பிழைக்க வைத்தார் அவர். அந்த ஆஸ்பத்திரியில் நான் இருந்தபோது தான் என்னை போன்று நிறைய பேருக்கு அவர் இலவசமாக ஆபரேஷன் செய்து உயிர் பிழைக்க வைக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. நிறைய பேரின் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் அவரை கொடூர வில்லனாக காட்டி இருக்கிறேன்.
படத்தில் நாயகர்களாக நடிப்பவர்களுக்கும் டாக்டர் சரவணனுக்கும் ஒரு மோதல் உருவாகிறது. இதற்கு காரணம் சரவணனின் உறவுக்கார பெண் ஒருத்தியின் காதலுக்கு அவர்கள் உதவியது தான்! இதனால் ஏற்பட்ட மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா? என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை’’ என்றார்.

‘அய்யனார் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் யோகேஸ்வரன் போஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள கமலா தியேட்டரில் நடந்தது. திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு பாடல் சி.டி.யை வெளியிட, இயக்குன்ர பேரரசு பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் ஸ்ரீகாந்த் தேவா, கஞ்சா கருப்பு, இயக்குனர் ராஜ்கபூர் உட்பட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;