ஷாரூக்கானை இயக்கப்போகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

ஷாரூக்கானை இயக்கப்போகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

செய்திகள் 19-Mar-2015 11:35 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து தற்போது சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ எனும் பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி படத்தை முருகதாஸ் இயக்கப்போகிறார் என்றும், அதனை ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போகிறது என்றும் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. ஆனால், இதனை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மறுத்ததாகவும் அடுத்த நாளே கூறப்பட்டது.

இந்நிலையில் ‘அகிரா’ படத்தைத் தொடர்ந்து, ஷாரூக் கானை நாயகனாக்கி புதிய பாலிவுட் படம் ஒன்றை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போவதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன. இப்படத்தை ஷாரூக்கானின் ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;