இந்த வாரம் 10 படங்கள்!

இந்த வாரம் 10 படங்கள்!

செய்திகள் 19-Mar-2015 11:05 AM IST VRC கருத்துக்கள்

கடந்த வாரம் வெள்ளிக் கிழமை (மார்ச்-13) 9 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டு, அதில் 8 தமிழ் படங்கள் ரிலீசானது! ’இரவும் பகலும் வரும்’ என்ற படம் மட்டும் ஒரு சில காரணங்களால் ரிலீசாகவில்லை! கடந்த வாரம் 8 படங்கள் ரிலீசாகியது என்றால் இந்த வாரம் ‘இரவும் பகலும் வரும்’ படம் உட்பட 10 படங்கள் ரிலீசாகவிருக்கிறது.

இவ்வளவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக என்ன காரணம் என்றால், பள்ளி, கல்லூரிகளில் நடந்து வரும் பரீட்சை மற்றும் உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியும் நடந்து வருவதால் பெரிய நடிகர்கள் நடித்த எந்த படத்தையும் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக ரிலீஸ் செய்ய யாரும் முன்வரவில்லை! பெரிய பெரிய படங்கள் ரிலீசாகும் சமயத்தில் சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம்! நிலைமை அப்படியிருக்க, இப்போது எந்த பெரிய நடிகர்கள் நடித்த படங்களும் ரிலீஸ் ஆகாத நிலையில் சின்னப் பட தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது படங்களை ரிலீஸ் செய்ய களத்தில் குதித்திருப்பதே! வருகிற வெளிக்கிழமை (மார்ச்-20) வெளியாகவிருக்கும் படங்களின் விவரம் வருமாறு:

1. கள்ளப்படம்
2. பட்ற
3. காலகட்டம்
4. வெத்து வேட்டு
5. கடவுள் பாதி மிருகம் பாதி
6. மூச்
7. ஆயா வட சுட்ட கதை
8. திலகர்
9. அகத்திணை
10. இரவும் பகலும்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கள்ளப்படம் - டிரைலர்


;