ஆர்யா, அனுஷ்கா மீண்டும் இணையும் ‘இஞ்சி இடுப்பழகி’

ஆர்யா, அனுஷ்கா மீண்டும் இணையும் ‘இஞ்சி இடுப்பழகி’

செய்திகள் 19-Mar-2015 10:55 AM IST Top 10 கருத்துக்கள்

‘இரண்டாம் உலகம்’ படத்தைத் தொடர்ந்து பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஆர்யாவும், அனுஷ்காவும் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் தயாராகும் இப்படத்திற்கு, தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’ எனவும், தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே.எஸ்.பிரகாஷ் இந்த ‘இஞ்சி இடுப்பழகி’யை இயக்குகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார். கனிகா திலோன் கோவேலமுடி இப்படத்திற்கான கதையை எழுத, பாடல்களை எழுதுகிறார் மதன் கார்க்கி.

இன்று (19-3-2015) காலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவிலுள்ள பிள்ளையார் கோவிலில் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;