‘‘போடா ஆண்டவனே என் பக்கம்!’’ - சொல்கிறார் விஷ்ணு

‘‘போடா ஆண்டவனே என் பக்கம்!’’ - சொல்கிறார் விஷ்ணு

செய்திகள் 19-Mar-2015 10:14 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினியின் பிரபல வசனத்தையே டைட்டிலாக வைத்து தன் புதிய படத்தைத் துவங்கிவிட்டார் ‘சேட்டை’ கண்ணன். ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு ஹீரோவாக நடிக்க, ‘பிசாசு’ நாயகி பிரயாகா ஹீரோயினாக நடிக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கான இசையமைப்பாளர் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மே இறுதியில் சென்னையில் படப்பிடிப்பை ஆரம்பித்து, தொடர்ந்து 45 நாட்களுக்கு ஷூட்டிங் நடத்தவிருக்கிறார் இயக்குனர் கண்ணன். அதோடு பாடல் காட்சிகளுக்காக விஷ்ணு, பிரயாகா உள்ளிட்ட படக்குழு 10 நாட்கள் கனடாவுக்கும் செல்லவிருக்கிறது. காதல், காமெடி, ஆக்ஷன் என மூன்றும் கலந்த கலவையாக உருவாகவிருக்கும் இப்படத்திற்காக சென்னை ரிச் ஸ்ட்ரீட் போல் தோற்றமுடைய செட் ஒன்றை அமைத்து படமாக்கவிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;