விரைவில் ‘அச்சம் என்பது மடைமையடா’ ஃபர்ஸ்ட் லுக்!

விரைவில் ‘அச்சம் என்பது மடைமையடா’ ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகள் 18-Mar-2015 2:53 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தின் ஷூட்டிங் கடந்த வருடமே ஆரம்பமானது. பின்னர் அஜித் படம் கமிட்டானதால் அதில் பிஸியான கௌதம், சிம்பு படத்திற்கு தற்காலிக பிரேக் விட்டிருந்தார். தற்போது அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகிவிட்டதால், மீண்டும் சிம்பு படத்தின் படப்பிடிப்பு வேலைகளைத் துவங்கினார். கடந்த சில வாரங்களாக பிஸியாக போய்க் கொண்டிருந்த இந்த 2வது ஷெட்யூல் தற்போது நிறைவு பெற்றுவிட்டது.

இதனையடுத்து மீண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் அடுத்த ஷெட்யூலை ஆரம்பிக்க உள்ளது ‘அச்சம் என்பது மடைமையடா’ படக்குழு. இந்த இடைவெளியில் இப்படத்திற்கான டைட்டில் லோகோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்கும் பணி நடைபெறுகிறதாம். விரைவில் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என்று கூறியிருக்கிறார் சிம்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;