இயக்குனராகும் கமல், விஜய், சூர்யா பட சண்டைப்பயிற்சியாளர்!

இயக்குனராகும் கமல், விஜய், சூர்யா பட சண்டைப்பயிற்சியாளர்!

செய்திகள் 18-Mar-2015 2:39 PM IST Chandru கருத்துக்கள்

உலகநாயகனுடன் வேட்டையாடு விளையாடு, இளையதளபதியுடன் காவலன், சூர்யாவுடன் கஜினி என அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் சண்டை பயிற்சயாளராக பணியாற்றி வந்த ‘ஸ்டன்’ சிவா தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். 7 ஸ்டார் யூனிவர்சல் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடட் சார்பாக லேனி ஹவ் தயாரிக்கும் படத்தில் கெவின், ஸ்டிவின், லேனி ஹவ், ரோஹினி, ஜுனியர் பாலையா, நந்தா பெரியசாமி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

லேனி ஹவ் எழுதிய கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ‘ஸ்டன்’ சிவா. இப்படத்தின் நாயகன் கதாபாத்திரத்துடன் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் தன்னை ஒப்பிட்டு பார்க்கும் வகையிலும், நாயகனை போன்ற குணாதசியங்கள் நமக்கும் தோன்றாதா எனும் வகையிலும் கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாம். கேரா ஜெரிமீயா இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் என்.எஸ்.உதய்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;