வெளிநாடு பறக்கும் ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா!

வெளிநாடு பறக்கும் ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா!

செய்திகள் 18-Mar-2015 1:11 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, அஞ்சலி முதலானோர் நடித்து வரும் ‘அப்பா டக்கர்’ படத்தின் வசன காட்சிகள் (டாக்கி போர்ஷன்) சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது! இன்னும் இரண்டு பாடல்களை படம் பிடித்தால் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும். சுராஜ் இயக்கி வரும் இப்படத்தின் மீதியுள்ள இரண்டு பாடல்களை படம் பிடிக்க ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா ஆகியோர் அடங்கிய படக்குழுவினர் விரைவில் வெளிநாடு பறக்கவிருக்கின்றனர். ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், வி,சாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். யூ.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;