லக்ஷ்மி மேனனைத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கும் டிடி!

லக்ஷ்மி மேனனைத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கும் டிடி!

செய்திகள் 18-Mar-2015 12:50 PM IST Chandru கருத்துக்கள்

படித்துக் கொண்டே நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லக்ஷ்மிமேனன் சமீபத்தில் செய்த ஒரு காரியம் திரையுலகத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால் நானும் என்னிடமுள்ள சில கெட்ட பழக்கங்களை கைவிடுகிறேன்’ என்ற வாசகங்கள் கொண்ட போர்டை நடிகை லக்ஷ்மிமேனன் கையில் பிடித்தபிடி இருந்த புகைப்படம் ஒன்று கடந்த சில நாட்களாக இணையதளத்தில் வெகுவாகப் பரவி வந்தது. இது பல இணையதளங்களில் செய்தியாகவும் வெளிவந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

நடிகை லக்ஷ்மிமேனனைத் தொடர்ந்து விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினியும் (டிடி)புதிய போர்டு ஒன்றை கையில் பிடித்தபடி இருக்கும் படம் ஒன்று தற்போது ட்விட்டரில் பரவி வருகிறது. அதில் ‘நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால் நான் ஷாப்பிங் செய்வதை நிறுத்துகிறேன்’ என அக்கறையுடன் அதே நேரம் காமெடியாகவும் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

நல்லது நடந்தா சரிதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;