நாயகியே கதை எழுதிய ‘ மசாலா படம்’

நாயகியே கதை எழுதிய ‘ மசாலா படம்’

செய்திகள் 18-Mar-2015 12:40 PM IST VRC கருத்துக்கள்

ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இயக்குனாராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மசாலா படம்’. ‘மிர்ச்சி’ சிவா, பாபி சிம்ஹா, லக்ஷ்மி தேவி மற்றும் கௌரவ் நடிக்கும் இப்படத்தை ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ சார்பில் விஜய் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் லக்‌ஷ்மி தேவி தான்! இது குறித்து அவர் பேசும்போது, ‘‘கவிதைகள், சிறு கதைகள், நாடகங்கள் எழுதி வந்த எனக்கு இப்போது சினிமாவுக்கு கதை எழுதுவதும் பிடித்திருக்கிறது.

இப்படத்தின் இயக்குனர் லக்ஷ்மன், தயாரிப்பாளர் விஜய், நான் என அனைவரும் நல்ல நண்பர்கள். மசாலா படங்கள் பற்றி ஒரு படம் எடுக்கலாம் என்று திட்டமிடவில்லை. பலரும் இங்கு மசாலா படங்கள் மற்றும் ஆன்லைன் சினிமா விமர்சகர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை அடிப்படைடயாக வைத்தே தான் இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறேன். இது எல்லோருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வல்லவனுக்கு வல்லவன் - டீசர்


;