பூர்ணாவை வாழ்த்திய மகேஷ்பாபு!

பூர்ணாவை வாழ்த்திய மகேஷ்பாபு!

செய்திகள் 18-Mar-2015 12:34 PM IST Chandru கருத்துக்கள்

‘ஆகடு’ தெலுங்கு படத்தைத் தொடர்ந்து தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘ஸ்ரீமந்துடு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் மகேஷ்பாபு. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராகுல் ரவீந்திரன், ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், பிரம்மானந்தம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். லேட்டஸ்ட்டாக இப்படத்தில் நடிகை பூர்ணாவும் இணைந்திருக்கிறார்.

ராஜு சுந்தரம் மாஸ்டரின் நடன இயக்கத்தில் நடிகை பூர்ணா ஆடிய குத்துப்பாடல் ஒன்று இப்படத்திற்காக நேற்று படமாக்கப்பட்டதாம். படப்பிடிப்பு இடைவெளியில் மகேஷ்பாபுவை சந்தித்துப் பேசினாராம் பூர்ணா. அப்போது அவரிடம் பேசிய மகேஷ்பாபு பூர்ணாவிடம் கைகுலுக்கி ‘ஆல் தி பெஸ்ட்’ என வாழ்த்தினாராம். இதனை பெரிய கௌரவமாக தன் தோழிகளிடம் கூறி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் பூர்ணா.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - களவாணி பாடல் வீடியோ


;