கமல் படத்திற்கு கிடைத்த வெற்றி!

கமல் படத்திற்கு கிடைத்த வெற்றி!

செய்திகள் 18-Mar-2015 12:24 PM IST Top 10 கருத்துக்கள்

‘வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ்’ சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ‘ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘பாபநாசம்’. சில மாதங்களுக்கு முன்பு சதீஷ் பால் என்பவர், ‘பாபநாசம்’ (திருசியம்) படத்தின் கதை தான் எழுதிய ‘ஒரு மழக் காலத்து’ என்னும் நாவலில் உள்ள கதையை ஒற்றிருக்கிறது என்றும், ‘திருசியம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் தனது அனுமதியில்லாமல் திரைப்படமாக்கிவிட்டதாகவும் எனவே ‘பாபநாசம்’ படப்பிடிப்பை நிறுத்த கோரியும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ‘பாபநாசம்’ படப்பிடிப்பிற்க்கு இடைக்கால தடை பெற்றிருந்தார். அந்த மனுவின் மீது மேல்முறையீடு செய்த தயாரிப்பாளர் தரப்பு, தற்காலிகமாக இடப்பட்ட தடையை நீக்கி படப்பிடிப்பை தொடர்ந்தனர். இந்நிலையில் எர்ணாகுளம் 2-வது கூடுதல் நீதிமன்ற அமர்விற்கு வந்த இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இவ்வழக்கினை தள்ளுபடி செய்து தயாரிப்பாளருக்கு ஆதரவான தீர்ப்பினை அளித்துள்ளார்.

இதனால் ‘பாபநாசம்’ படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளது. ‘பாபநாசம்’ படத்தின் இசை மற்றும் பட வெளீயீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பினர் கூறியுள்ளனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;