தொடங்கியது ‘பெங்களூர் டேஸ்’ ரீ-மேக்!

தொடங்கியது ‘பெங்களூர் டேஸ்’ ரீ-மேக்!

செய்திகள் 18-Mar-2015 12:13 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் ஹிட் அடித்த, ‘பெங்களூர் டேஸ்’ படம் தமிழ், தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. இரண்டு மொழியிலும் இப்படத்தை ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘பொம்மிருலு’ படப் புகழ் பாஸ்கர் இப்படத்தை இரண்டு மொழியிலும் இயக்குகிறார். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் ஆர்யா நடிக்கிறார். நிவின் பாலி நடித்த கேரக்டரில் ‘பாபி’ சிம்ஹா நடிக்கிறார். ஃபஹத் பாசில் நடித்த கேர்கடரில் ராணாவும், நஸ்ரியா நடித்த கேரக்டரில் ஸ்ரீதிவ்யாவும் நடிக்கிறார். ‘பெங்களூர் டேஸ்’ படத்தில் மாற்றுத் திறனாளியாக நடித்த பார்வதியே தமிழ், தெலுங்கிலும் அதே கேரக்டரில் நடிக்கிறார். மலையாளத்தில் நித்யா மேனன், இஷா தல்வர் நடித்த கேரக்டர்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை! ‘பெங்களூர் டேஸ்’ படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தரே ரீ-மேக்கிற்கும் இசை அமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னை ஏ.வி.எம்.ஸ்டுடியோவிலுள்ள பிள்ளையார் கோயிலில் நடந்தது. இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, இப்படத்தின் இசை அமைப்பாளர் கோபி சுந்தர், கலை இயக்குனர் கதிர், ஒளிப்பதிவாளர் குகன் உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;