ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’

செய்திகள் 18-Mar-2015 12:03 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் யாரை இயக்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவேளையில் சத்தமில்லாமல் ஹிந்தி படத்தை இயக்கச் சென்றுவிட்டார். சோனாக்ஷி சின்ஹாவை நாயகியாக்கி, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமொன்றை அவர் ஹிந்தியில் இயக்கவிருக்கிறார். சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்து தமிழில் வெளிவந்த ‘மௌனகுரு’ படத்தையே தற்போது அவர் ஹிந்தியில் சோனாக்ஷி சின்ஹாவுக்காக சில மாற்றங்களைச் செய்து ரீமேக் செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கஜினி, ஹாலிடே படங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த 3வது ஹிந்தி படத்திற்கு ‘அகிரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘அகிரா’ என்றால் சமஸ்கிருதத்தில் தெய்வீக வலிமை என்று அர்த்தமாம். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;