ராய் லக்ஷ்மியின் அடுத்த பேயாட்டம்!

ராய் லக்ஷ்மியின் அடுத்த பேயாட்டம்!

செய்திகள் 18-Mar-2015 10:56 AM IST Chandru கருத்துக்கள்

ஏகப்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் ராய் லக்ஷ்மியின் கேரியரில் ‘காஞ்சனா’ மறக்க முடியாத படமாக மாறியது. அப்படத்தின் வெற்றி தந்த ராசியோ என்னவோ சுந்தர்.சியும் தன் ‘அரண்மனை’ படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக ராய் லக்ஷ்மியையும் இணைத்துக் கொண்டார். இப்படமும் சூப்பர்ஹிட்டாக ராய் லக்ஷ்மிக்கும் பேய்க்கும் அப்படியொரு பந்தம் தொடர்ந்தது. தற்போது 3வது முறையாக புதிய பேய் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம் ராய்.

ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘சௌகார்பேட்டை’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பின்புறமுள்ள சௌகார்பேட்டை ஏரியாவை மையமாக வைத்துதான் இந்த ஹாரர் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ஹாரர் + காமெடி கலந்த இந்த பேய்ப்படத்தை ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ பட இயக்குனர் வடிவுடையான் இயக்கவிருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இளமி - டிரைலர்


;