‘கொம்பன்’ கார்த்தியின் ‘பையா’ சென்டிமென்ட்!

‘கொம்பன்’ கார்த்தியின் ‘பையா’ சென்டிமென்ட்!

செய்திகள் 18-Mar-2015 10:29 AM IST Chandru கருத்துக்கள்

‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கொம்பன்’ படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தற்போது ஏப்ரல் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலககோப்பை ஜுரம், ஆண்டுத்தேர்வு, படவேலை பென்டிங் என இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றத்துக்கு ஆளுக்கொரு காரணம் சொல்லி வந்தாலும் கார்த்தியைப் பொறுத்தவரை இந்த ஏப்ரல் 2ஆம் தேதி என்பது அவருக்கு மிகவும் ராசியான நாள். இதனால் ரிலீஸ் தேதி மாறியது குறித்து சந்தோஷத்தில் இருக்கிறார் கார்த்தி.

கார்த்தியின் சந்தோஷத்திற்கு அப்படியென்ன காரணம் என்கிறீர்களா..? பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என தனது முதல் இரண்டு படங்களிலும் மக்கிப்போன சட்டை, கிழிந்த லுங்கி என நடித்துக் கொண்டிருந்த கார்த்தியை மாடர்ன் யூத்தாக மாற்றியது லிங்குசாமியின் ‘பையா’ படம்தான். சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களோடு 100 நாட்களைக் கடந்து ஜெயித்த ‘பையா’ படம் வெளியானது 2010ஆம் வருடம் ஏப்ரல் 2ஆம் தேதிதான். அந்த ராசி நிச்சயம் ‘கொம்பன்’ படத்தின் வெற்றிக்கும் கைகொடுக்கும் என கார்த்தி நம்புவதுதான் அவரின் சந்தோஷத்திற்குக் காரணம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;