த்ரிஷா இல்லனா நயன்தாரா... ஆனந்தி, சிம்ரனோடு மனீஷா!

த்ரிஷா இல்லனா நயன்தாரா... ஆனந்தி, சிம்ரனோடு மனீஷா!

செய்திகள் 18-Mar-2015 10:09 AM IST Chandru கருத்துக்கள்

அதிரடியாய் 50 நாட்களைக் கடந்து சாதித்த ‘டார்லிங்’ படத்தைத் தொடர்ந்து தற்போது பென்சில் மற்றும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படங்களில் கவனமாக வேலை செய்து கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் / நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார். த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ‘கயல்’ ஆனந்தியுடன் சமீபத்தில் சிம்ரனும் இணைந்தார். லேட்டஸ்ட்டாக ‘வழக்கு எண் 18/9’ பட நாயகி மனீஷாவும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் மனீஷாவுக்கான காட்சிகளுக்கு ஏற்கெனவே படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டதாம். சிம்ரனுக்கான காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்படலாம் என்கிறார்கள். இப்படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் அப்பா ரவி கந்தசாமி ஏற்கெனவே பாரதிராஜா, செல்வமணி ஆகியோரிடமும் உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார். தற்போது தன் மகனிடமும் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படக்குழுவை வியக்கவைத்துக் கொண்டிருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;