‘கொம்பன்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

‘கொம்பன்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

செய்திகள் 17-Mar-2015 1:57 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ படம் இம்மாதம் 27-ஆம் தேதி ரிலீசாகவிருந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இப்படத்தை ஒரு வாரம் தள்ளி எப்ரல் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர் இப்பட குழுவினர். ‘குட்டிப்புலி’ படப் புகழ் முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்க இவர்களுடன் ராஜ்கிரண், கோவை சரளா என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீசாகவிருந்த ‘உத்தம வில்லன்’ படத்தின் வெளியீட்டும் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நண்பேன்டா’ மற்றும் ‘ஜெயம்’ ரவி நடித்துள்ள ‘பூலோகம்’ ஆகிய படங்கள் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;