ஹாட்ரிக் ‘யு’ வாங்கிய உதயநிதி!

ஹாட்ரிக் ‘யு’ வாங்கிய உதயநிதி!

செய்திகள் 17-Mar-2015 11:24 AM IST VRC கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘நண்பேன்டா’ படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று சென்சார் ஆனது! இப்படத்தை பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர்! அதைப்போலவே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சந்தானமும் இப்படத்தில் நடித்துள்ளார். அத்துடன் இதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் நடித்த இரண்டு படங்களுக்கும் ‘யு’ சர்டிஃபிக்கெட் தான்! இப்போது ‘நண்பேன்டா’ படத்திற்கும் ‘யு’ கிடைத்திருப்பதால் ஹாட்ரிக் அடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டோரா - டீசர்


;