பிரபல இயக்குனர் அமீர்ஜான் காலமானார்!

பிரபல இயக்குனர் அமீர்ஜான் காலமானார்!

செய்திகள் 17-Mar-2015 10:30 AM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த் நடித்த ‘சிவா’, முரளி நடித்த ‘பூவிலங்கு’, விஜயகாந்த் நடித்த ‘உழைத்து வாழ வேண்டும்’, கார்த்திக் நடித்த ‘நட்பு’ மற்றும் ‘வண்ணக்கனவுகள்’, ‘தர்மபத்தினி’, ‘உன்னை சொல்லி குற்றமில்லை’ என கிட்டத்தட்ட 20 படங்களை இயக்கியவர் அமீர்ஜான்! அவர் இன்று காலை சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது. அவரது இறுதி சடங்குகள் நாளை நடக்கவிருக்கிறது! தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குனராக விளங்கிய அமீர்ஜானின் இழப்பு பெரும் இழப்பு தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;