விக்ரம் நாயகி... இப்போ சிம்பு படத்தில்?

விக்ரம் நாயகி... இப்போ சிம்பு படத்தில்?

செய்திகள் 17-Mar-2015 10:11 AM IST Chandru கருத்துக்கள்

‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்களைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் எஸ்டிஆர். இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக போய்க் கொண்டிருப்பதால் அனேகமாக மே இறுதியில் படம் திரைக்கு வர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இதனால் சிம்புவின் மேற்கண்ட 3 படங்களும் ஒரு சில வார இடைவெளிகளில் அடுத்தடுத்து ரிலீஸானால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது சிம்பு வட்டாரம்.

இது ஒருபுறமிருக்க செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்திற்கான வேலைகளும் இன்னொருபுறம் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. தற்போது திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளில் செல்வா மும்முரமாக இருக்கிறார். சம்மரில் படப்பிடிப்புக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை தீக்ஷா சேத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இவர் ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜபாட்டை’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(சிம்பு, ஜெய் நடிக்கவிருந்த ‘வேட்டை மன்னன்’ படத்தில் ஹன்சிகாவுடன் இன்னொரு நாயகியாக தீக்ஷா சேத்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;