‘சதுரன்’ படத்தில் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்!

‘சதுரன்’ படத்தில் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்!

செய்திகள் 16-Mar-2015 4:20 PM IST Chandru கருத்துக்கள்

‘மூடர்கூடம்’ ராஜாஜி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சதுரன்’. இப்படத்தை குபேரன் சினிமாஸ் சார்பில், ‘குபேரன்’ பொன்னுச்சாமி தயாரிக்கிறார். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் ராஜீவ் பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷா அறிமுகமாகும் இப்படத்தில் ‘முண்டாசுப்பட்டி’ காளிவெங்கட், ‘கயல்’ தேவராஜ், இயக்குனர் ராஜீஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் மோனிக்குமார் ஹாலிவுட் படங்களான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’, ‘கோஸ்ட் புரோட்டோகால்’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஏ.கே.ரிஷால்சாய் ‘சதுரன்’ படத்திற்கு இசையமைதிருக்கிறார்.

திகில் காட்சிகளுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் சென்னை நகரத்தின் முக்கியமான சாலைகளில் முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட உள்ளதாம். சென்னையின் இருண்ட பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் படமாக இந்த ‘சதுரன்’ அமையும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;