5 விருதுகளை வென்று அசத்திய ‘காவியத்தலைவன்’

5 விருதுகளை வென்று அசத்திய ‘காவியத்தலைவன்’

செய்திகள் 16-Mar-2015 3:51 PM IST Chandru கருத்துக்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த ‘காவியத்தலைவன்’ படம் வசூல்ரீதியாக வெற்றியைப் பெறவில்லை. ஆனால், விமர்சகர்கள் மத்தியில் படம் பாராட்டுக்களை அள்ளியது. தற்போது மேலும் ஒரு கௌரவமாக இப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன.

ஒவ்வொரு வருடமும் சிறந்த தமிழ்ப்படங்களுக்கான ‘நார்வே விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அந்தவகையில் கடந்த 2014ம் ஆண்டிற்கான விருகளை ‘நார்வே’ விருதுக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதில் ‘காவியத்தலைவன்’ படத்திற்கு மட்டுமே 5 விருதுகள் கிடைத்துள்ளன. இதுதவிர ‘ஜிகர்தண்டா’ 3 விருதுகளையும், ‘கயல்’ 2 விருதுகளையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

சிறந்த படம் - குக்கூ
சிறந்த இயக்குனர் - வசந்தபாலன் (படம் : காவியத்தலைவன்)
சிறந்த நடிகர் - சித்தார்த் (படம் : காவியத்தலைவன்)
சிறந்த நடிகை - வேதிகா (படம் : காவியத்தலைவன்)
சிறந்த கதாபாத்திர நடிகர் - சிம்ஹா (படம் : ஜிகர்தண்டா)
சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (படம் : காவியத்தலைவன்)
சிறந்த குணச்சித்திர நடிகை - குயிலி (படம் : காவியத்தலைவன்)
சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாரயணன் (படம் : ஜிகர்தண்டா)
சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி (படம் : குக்கூ)
சிறந்த பாடகர் - ஹரிச்சரண் (படம் : காவியத்தலைவன்)
சிறந்த பாடகி - வைக்கம் விஜயலட்சுமி (படம் : என்னமோ ஏதோ)
சிறந்த ஒளிப்பதிவாளர் - வெற்றிவேல் (படம் : கயல்)
சிறந்த எடிட்டர் - விவேக் ஹர்ஷன் (படம் : ஜிகர்தண்டா)
சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம் - சிகரம் தொடு
வாழ்நாள் சாதனையாளர் விருது - கே.பாலசந்தர்
கலைச்சிகரம் விருது - சிவக்குமார்
சிறப்பு ஜுரி விருது - வின்செண்ட் (படம் : கயல்)
பாலுமகேந்திரா விருது - ரா.பார்த்திபன் (படம் : கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்)
பாலசந்தர் விருது - விவேக்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;