‘மாரி’யிலிருந்து மீண்டும் ‘விஐபி’யாக மாறும் தனுஷ்!

‘மாரி’யிலிருந்து மீண்டும் ‘விஐபி’யாக மாறும் தனுஷ்!

செய்திகள் 16-Mar-2015 12:44 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த இரண்டு மாதங்களாக வடசென்னை தாதா ‘மாரி’யாக முறுக்கு மீசை, குறுந்தாடியுடன் சுற்றிக் கொண்டிருந்த தனுஷ், மீண்டும் ‘விஐபி’ கெட்அப்புக்கு மாறுகிறார். ‘அனேகன்’ படத்தைத் தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படப்பிடிப்பில் கடந்த சில வாரங்களாக காஜல் அகர்வாலுடன் பிஸியாக நடித்து வந்தார் தனுஷ். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (16&3&2015) நிறைவடைந்திருப்பதாக தனுஷ் ட்வீட் செய்திருக்கிறார். அதோடு ‘மாரி’ மீசையை இழக்க வேண்டிய நேரம் வந்திருப்பதாகவும் காமெடியாகக் கூறியிருக்கிறார்.

‘மாரி’ படத்தின் போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் துவங்கும் அதேநேரம், வரும் 20ஆம் தேதி முதல் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், சமந்தா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

இன்னொருபுறம் பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹிந்தியில் தனது 3வது படத்திலும் நடிக்கும் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார் தனுஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;