கடைசியிலேயே சிம்புவையே ‘ஃபீல்’ பண்ண வச்சிட்டீங்களேப்பா!

கடைசியிலேயே சிம்புவையே ‘ஃபீல்’ பண்ண வச்சிட்டீங்களேப்பா!

செய்திகள் 16-Mar-2015 12:39 PM IST Chandru கருத்துக்கள்

இணையதளத்தில் கிண்டலடித்து செய்யப்படும் போஸ்ட்கள் வரைமுறையின்றி தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கிறது. இன்டர்நெட்டில் ஹிட்டாகும் ‘கலாய்’கள் படத்தில் காட்சியாக வைக்கும் அளவுக்கு பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன. அதற்கு ஒரு சாம்பிள்.... ‘என்னம்மா நீங்க இப்டி பண்றீங்களேமா’. இதுபோன்ற ஏராளமான வசனங்களும், காட்சிகளும், கலாய்த்தல்களும் தற்போது படங்களில் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன. இதுபோன்ற ‘மீமீகளை‘ உருவாக்கும் குரூப் சமீபத்தில் ‘வாலு’ பட ரிலீஸ் குறித்தும் தங்களது கைவரிசையைக் காட்டி வருகின்றன.

‘வாலு’ படம் உருவாக ஆரம்பித்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், பல பிரச்சனைகளால் அப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகிறது. கடந்த வருடம் டிசம்பரில் வெளியாகும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டபோது, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலீஸாகவிருந்ததால் ‘வாலு’வின் ரிலீஸ் தேதியை சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதிக்கு மாற்றினார்கள். அந்த தேதியும் மார்ச் 27க்கு தள்ளி வைக்கப்பட்டது. அதனை முன்னிட்டு கடந்த வாரம் சென்சாருக்கு அனுப்பட்டு ‘வாலு’வுக்கு ‘யு’ சான்றிதழும் கிடைத்தது. இந்நிலையில் மார்ச் 27ல் உறுதியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட ‘வாலு’ படம் அந்த தேதியிலும் வராது என செய்திகள் கிளம்பவே, அதனை வைத்து இணையதள விஷமிகள் தங்களது கைவரிசை காட்டத் துவங்கிவிட்டனர்.

இவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சிம்பு, ‘‘எனக்கெதிராக சிலர் தேவையில்லாத விஷயங்களை பரப்பி வருகின்றனர். இவர்களை நான் மன்னித்தாலும் கர்மா மன்னிக்காது’’ என வேதனையாக ட்வீட் செய்துள்ளார்.

மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையுமே ஜாலியாக பேசிவரும் சிம்புவையே கடைசியில் ‘ஃபீல்’ பண்ண வைத்துவிட்டார்களே இந்த ‘மீமீ’ குரூப்ஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;