‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’ படப்பிடிப்பு துவங்கியது!

‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’  படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 16-Mar-2015 12:36 PM IST VRC கருத்துக்கள்

‘ஆர்.ஆர்.ராகவேந்திரா ஃபிலிம்ஸ்’ சார்பில் ராமாபுரம் ராஜேஷ் வழங்கும் ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் விக்ரம்சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ரக்ஷன் நடிக்கிறார். கதாநாயகியாக சாரா தேவா நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, சிங்கம்புலி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, ‘போஸ்’ வெங்கட், டி.பி.கஜேந்திரன், டெல்லிகணேஷ், அப்புக்குட்டி என பலர் நடிக்கும் இப்படத்தை பாரதி மோகன் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். படத்தில் வரும் ஒரு காட்சி குறித்து பாரதி மோகன் கூறும்போது, ‘‘இப்படத்திற்காக அமைச்சர் காத்துவாயனாக நடிக்கும் மனோபாலா ஏழை திருமணங்களை நடத்தி வைகிறார். மனோபாலா நடத்தி வைக்கும் திருமண ஜோடிகளில் அப்புகுட்டி - வர்ஷா ஜோடியும் ஒன்று. அப்புகுட்டி, வர்ஷா கழுத்தில் தாலிகட்ட அதை பார்த்த சிங்கம்புலி அதிர்ச்சி அடைகிறார். ஏன்? எதற்கு என்பதற்கான விளக்கம் திரையில்! இது போன்ற பல சுவாரஸ்யமான காட்சிகளை கொண்டு இப்படத்தை இயக்குகிறேன் ’’ என்றார் இயக்குனர் பாரதிமோகன். லால் பாபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;