தல - தளபதி ரசிகர்களை மோதவிடும் சாமி!

தல - தளபதி ரசிகர்களை மோதவிடும் சாமி!

செய்திகள் 16-Mar-2015 12:21 PM IST VRC கருத்துக்கள்

சர்ச்சைக்குரிய பல படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’. இப்படத்தில் அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க, அவரது தங்கையாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார். இப்படத்தில் அஜித் ரசிகர்களையும், விஜய் ரசிகர்களையும் மோதவிடும் காட்சி ஒன்றை வைத்துள்ளார் சாமி! படத்தில் ப்ரியங்கா அஜித் ரசிகையாகவும், வர்ஷா விஜய் ரசிகையாகவும் வருகிறார்கள். இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை பெருமைகளை சொல்லி காரசாரமாக மோதிக் கொள்வார்கள். ப்ரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு காரசாரமாக பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார். இப்படியாக இவர்களின் சண்டை கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு நீளும். படத்தில் தல ரசிகரையே ப்ரியங்கா மணந்து கொள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி 150-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. படம் பார்த்து தியேட்டரில் அஜித் ரசிகர்க்ளும், விஜய் ரசிகர்களும் மோதிக்கொள்ளாமல் இருந்தால் சரி! இந்தப் படத்தை ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;