கே.பாலச்சந்தர் பெயரில் புதிய ட்ரஸ்ட்!

கே.பாலச்சந்தர் பெயரில் புதிய ட்ரஸ்ட்!

செய்திகள் 16-Mar-2015 11:04 AM IST VRC கருத்துக்கள்

மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் பெயரில் “கே.பாலசந்தர் ஃபவுண்டேஷன்” என்ற ட்ரஸ்ட் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் அவரது குடும்ப உறுப்பினர்களான ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி, பிரசன்னா, கீதா கைலாசம், கந்தசாமி பரதன் ஆகியோர்! இவர்களுடன் இயக்குனர் வசந்த் சாயும் இந்தக் குழுவில் ஒரு அங்கமாக இருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் கீழ்கண்ட திட்டங்களை விரைவில் முறையாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் அளித்துவிட்டு செயல்படுத்த உள்ளதாக இவர்கள் அறிவித்துள்ளார்கள்! அதன் விவரம் வருமாறு:

1. கே.பி. அவர்களின் விருப்பபடி திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்குகல்வி உதவி.

2. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் Visual Communication துறையில் பயிலும் மாணவர்களில் சிறந்தவருக்கு கே பாலசந்தர் பெயரில் “Creative Excellence” விருது வழங்குதல்.

3. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9ல் விழா நடத்தி நாடகம், திரைப்படம், சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு விருது வழங்குதல்.

4. கே.பி அவர்களின் படைப்புகளை Digitize செய்து பாதுகாத்து அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஆவணப்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு பயன்தரக்கூடிய ஒரு கண்காட்சியகம் ஏற்படுத்துதல்.

5. கே.பி அவர்களின் மகன் மறைந்த கைலாசம் அவர்கள் பெயரில் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிறந்த படைப்பாளி விருது அளித்தல்.

6. கே.பி அவர்களைப் பற்றிய புத்தகங்களை வெளிக் கொணர்வது. அதில் முதல் புத்தகம் ஜூலை 9, 2015 அன்று வெளிவர இருக்கிறது. இதை எழுதியவர் இயக்குனர் வசந்த் சாய்.

இது போன்ற பல பணிகளை இந்த டிரஸ்ட் மூலம் மேற்கொள்ள உள்ளதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;