இர்ஃபான் நடிக்கும் ஆகம்!

இர்ஃபான் நடிக்கும் ஆகம்!

செய்திகள் 16-Mar-2015 10:55 AM IST VRC கருத்துக்கள்

‘பொங்கி எழு மனோகரா’ படத்தை தொடர்ந்து இர்ஃபான் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆகம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. ‘ஆகம்’ என்றால் ‘வருகை’ என்று அர்த்தமாம். ஜோஸ்டார் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக கல்வியாளர் கோடீஸ்வர ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். ‘‘மனிதத்தையும், தொழில்நுட்ப வளர்ச்சியினையும் ஒருங்கிணைத்து தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு நல்ல சினிமா உருவாக்குவதை கருத்தில் கொண்டு இப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளோம்’’ என்றார் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜா. இப்படத்தின் இர்ஃபானுக்கு ஜோடியாக அறிமுகம் தீக்‌ஷிதா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், ரவிராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை வி. விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். ஜினேஷ் வசனம் எழுத, விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பொங்கி எழு மனோகரா - நட நட வீடியோ சாங்


;