‘இரவும் பகலும் வரும்’ பிரச்சனை தீர்ந்தது!

‘இரவும் பகலும் வரும்’ பிரச்சனை தீர்ந்தது!

செய்திகள் 16-Mar-2015 10:51 AM IST VRC கருத்துக்கள்

‘அங்காடித் தெரு’ மகேஷ், அனன்யா ஜோடியாக நடித்துள்ள படம் ‘இரவும் பகலும் வரும்’. எஸ்.தணிகைவேல் வழங்க, ‘ஸ்கை டாட் ஃபிலிம்ஸ்’ பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரித்துள்ள இப்படத்தை பாலா ஸ்ரீராம் இயக்கியுள்ளார். இதில் வில்லனாக ஏ.வெங்கடேஷ் நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியிருக்கும் பாலா ஸ்ரீராம் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இப்படத்தின் கதாநாயகன் பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன். எல்லோரும் மதிக்கும் வகையில் நன்முறையில் நடந்துகொள்ளும் நற்பண்புகளை கொண்டவன். காலையில் கல்லூரிக்கு செல்பவன் இரவு மட்டும் திருடனாய் உலாவுகிறான்! அவன் ஏன் திருடனானான், எதற்காக திருடுகிறார் என்பதே ‘இரவும் பகலும் வரும்’ படத்தின் கதை.

ஒரு சில தினங்களுக்கு முன் வெளியாகவிருந்த இப்படத்தை திரையிடக் கூடாது என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் வென்ற தயாரிப்பு தரப்பினர் இப்படத்தை வருகிற 20-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதனால் இப்படம் வருகிற 20-ஆம் தேதி கண்டிப்பாக ரிலீசாகும் என்று தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு தீனா இசை அமைக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, வி.டி.விஜயன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;