‘தாரை தப்பட்டை’ படப்பிடிப்பில் சசிகுமார் கை முறிந்தது!

‘தாரை தப்பட்டை’ படப்பிடிப்பில் சசிகுமார் கை முறிந்தது!

செய்திகள் 16-Mar-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சசிகுமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக்காட்சியின் போது யாருக்கும் விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க அங்கு ஆம்புலன்ஸ் வண்டியுடன் மருத்துவர்கள் மர்த்தப்பட்டிருந்தனர். நேற்று (15-3-15) நடந்த படப்பிடிப்பில் ஆக்ரோஷமான சண்டை காட்சியின் தொடர்ச்சியை படமாக்கும்போது சசிகுமார் சற்றும் எதிர்பாரா வண்ணம் விபத்துக்குள்ளானார். அவரது இடது கை எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு அவரை ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் சசிகுமாரின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டது. சசிகுமாரிடம் சிறிது காலம் ஒய்வெடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சசிகுமார் ஓய்வு எடுப்பதற்காக சென்னை திரும்பியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;