நியூயார்க்கில் ‘இதயம் முரளி’

நியூயார்க்கில் ‘இதயம் முரளி’

செய்திகள் 16-Mar-2015 10:10 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் ஜீவா, த்ரிஷா, விநய் முதலானோர் நடித்து அஹ்மத் இயக்கிய ‘என்றென்றும் புன்னகை’ படம் கடந்த வெள்ளிக் கிழமை சிருனவ்வுல சிருஜலு’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து அஹ்மத் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ சார்பில் ‘இதயம் முரளி’ என்ற படத்தை இயக்குகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இதன் முதல் கட்ட வேலையாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் படப்பிடிப்பு நடத்த தகுதியான இடங்களை தேர்வு செய்ய அமெரிக்கா சென்றுள்ளார் அஹமத் தனது படக்குழுவினருடன். அங்கு படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்து இந்தியா திரும்ப இருக்கின்றனர். இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசை அமைப்பது இது தான் முதல் முறை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;