அப்பா அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா!

அப்பா அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா!

செய்திகள் 13-Mar-2015 11:27 AM IST VRC கருத்துக்கள்

‘பட்டத்து யானை’ படத்தில் விஷாலுடன் ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா அர்ஜுன், அடுத்து கதக் நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஐஸ்வர்யாவின் அப்பா அர்ஜுனே இயக்குகிறார். கதக் நடனம் தவிர எல்லா நடனங்களிலும் பயிற்சி பெற்றுள்ள ஐஸ்வர்யா இப்போது இப்படத்திற்காக கதக் நடனம் கற்று வருகிறார். ‘பட்டத்து யானை’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்ததாம்! ஆனால் அந்த கதைகள் பிடிக்கவில்லையாம்! நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பு என்றிருக்கும் ஐஸ்வர்யா, ஃபேஷன் டிசைனிங் பயிற்சி பெற்றவர்! இப்போது அர்ஜுன் இயக்கும் எல்லா படங்களிலும் ஐஸ்வர்யா தான் ஃபேஷன் டிசைனர். ஐஸ்வர்யா நடிப்பில் அடுத்து அர்ஜுன் இயக்கவிருக்கும் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறதாம்! இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார் ஐஸ்வர்யா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;