கதை எழுத ஆசைப்படும் ‘மாஸ்’ வடிவமைப்பாளர்!

கதை எழுத ஆசைப்படும் ‘மாஸ்’ வடிவமைப்பாளர்!

செய்திகள் 13-Mar-2015 11:20 AM IST Chandru கருத்துக்கள்

நாம் 120 ரூபாய் காசு கொடுத்து பார்க்கும் சினிமாவில் பெரும்பாலும் நாயகர்களும், நாயகிகளும், இயக்குனர்களும், இசையமைப்பாளர்களுமே கொண்டாடப்படுவார்கள். ஆனால், சினிமா எனும் தொழிற்சாலையில் பல துறைகளும், பல தொழிலாளிகளும் கண்ணுக்குத் தெரியாமல் பல கோணங்களில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் இவர்களுடைய பங்களிப்பும் நிச்சயம் அதில் குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு துறைதான் வடிவமைப்பு... ஒரு படத்தை ரசிகர்களுக்கு கொண்டுசேர்ப்பதில் முதல் பங்கு வகிப்பது அப்படத்தின் டைட்டில் டிசைனும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும்தான்.

சமீபகால படங்களில் ஒரு சில குறிப்பிட்ட படங்களின் போஸ்டரும், டைட்டில் டிசைனும் பார்த்தவுடனே நம் மனதை வசீகரித்திருக்கும். ஆனால், ரசிகர்களைப் பொறுத்தவரை அது அந்த நடிகரின் படம், அந்த இயக்குனரின் படம் என்பதோடு முடிந்துவிடும். அந்த ¬ட்டில், போஸ்டரை வடிவமைத்தவர் யார் எனும் அளவுக்கெல்லாம் கூர்ந்து கவனிப்பவர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு கிரியேட்டிவ் துறையில் தொடர்ந்து சாதித்துக் கொண்டிருப்பவர் ‘24AM’ டியூனி ஜான்.

இவர் பேரைச் சொன்னால் தெரியாதவர்களுக்குக்கூட இவரின் கைவண்ணத்தில் உருவான படங்களின் பெயரைச் சொன்னால் சட்டென ஞாபகத்திற்கு வந்துவிடும். ஆம்... பீட்சா, அட்டகத்தி, நேரம், ஜிகர்தண்டா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடமும, சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற சூர்யாவின் ‘மாஸ்’ படம் வரை பெரும்பாலான படங்களின் டிசைனர் இவர்தான். தமிழ் சினிமாவின் முக்கிய வடிவமைப்பாளர்களில் இப்போது டியூனியும் ஒருவர்.

கிரியேட்டிவ் துறைகளில் இருப்பவர்களுக்கு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருக்கும். அதற்கு டியூனியும் விதிவிலக்கல்ல... விரைவில் ஒரு தமிழ்ப் படத்தின் கதையை எழுத வேண்டும் என்பதுதான் இவரின் ஆசையாம். எண்ணம் ஈடேறட்டும்... வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;