வழக்கறிஞராக மாறிய நடிகை அஞ்சலி!

வழக்கறிஞராக மாறிய நடிகை அஞ்சலி!

செய்திகள் 13-Mar-2015 10:56 AM IST Chandru கருத்துக்கள்

‘வாலே... வாலே... வாலேலேலே...’ என சிங்கம் 2வில் சூர்யாவுடன் குத்தாட்டம் போட்டதோடு காணாமல் போன அஞ்சலி, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் தமிழில் மறுபடியும் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ படத்திலும், ராஜசேகர் இயக்கத்தில் விமலுக்கு ஜோடியாக ‘மாப்ள சிங்கம்’ படத்திலும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி.

தூங்கா நகரம், கலகலப்பு ஆகிய படங்களைத் தொடர்ந்து விமலுடன் ஹாட்ரிக் கூட்டணி அமைத்து நடித்துக் கொண்டிருக்கும் ‘மாப்ள சிங்கம்’ படத்தில் அஞ்சலிக்கு பெண் வழக்கறிஞர் வேடமாம். கிட்டத்தட்ட கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பில் தூய தமிழ் பேசும் வக்கீலாக நடித்து நடித்து இப்போது நிஜ வக்கீல்போலவே ஆகிவிட்டாராம் அஞ்சலி. இந்த வருட இறுதிக்குள் மேற்கண்ட 2 படங்களும் வெளிவந்தால் தமிழில் மறுபடியும் அஞ்சலி ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - டிரைலர்


;