‘ரோமியோ ஜூலியட்’டில் ஹன்சிகாவின் ‘ஓகே ஓகே’

‘ரோமியோ ஜூலியட்’டில் ஹன்சிகாவின் ‘ஓகே ஓகே’

செய்திகள் 13-Mar-2015 10:46 AM IST Chandru கருத்துக்கள்

‘எங்கேயும் காதல்’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவியும், ஹன்சிகாவும் இணைந்து நடித்திருக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லக்ஷ்மண் எனும் அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வாவும் நடிக்கும் இப்படத்தின் பாடல்கள், டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு ஏற்கெனவே சிங்கிள் டிராக்காக வெளிவந்த இப்படத்தின் ‘டண்டணக்கா...’ பாடலும் அதிரிபுதிரி ஹிட்டடித்துள்ளது.

இப்படத்தில் ஹன்சிகா ஏர் ஹோஸ்டஸாக நடித்திருக்கிறார். ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலின் ஹீரோ அவதாரம் எடுத்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திலும் விமான பணிப்பெண்ணாக ஹன்சிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இப்படத்தில் வரும் விமானப் பயணக் காமெடி ஒன்று ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதை போன்ற காமெடிக் காட்சி இந்த ‘ரோமியோ ஜூலியட்’டிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;