‘டண்டணக்கா…’ பாடல் சர்ச்சை! ‘ஜெயம்’ ரவி விளக்கம்!

‘டண்டணக்கா…’ பாடல் சர்ச்சை!  ‘ஜெயம்’ ரவி விளக்கம்!

செய்திகள் 13-Mar-2015 10:33 AM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ரவி, ஹன்சிகா, பூனம்பஜ்வா நடிக்க, எஸ்,.நந்தகோபால் தயாரிப்பில் லஷ்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரோமியோ ஜூலியட். இந்தப் படத்திற்காக டி.இமான் இசையில் அனிருத் பாடிய ‘டண்டணக்க..’ பாடல் ஹிட்டாகியிருக்கிறது. அதே நேரத்தில் சில விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. இது பற்றி நடிகர் ‘ஜெயம்’ ரவி கூறியிருப்பதாவது,

‘‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் நான் டி.ராஜேந்தரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னபிக்கையும், எதுவும் என்னால் முடியும் முயற்சி செய்து பார்..இதுவும் முடியும் இதுக்கு மேலும் முடியும் என்கிற அவரது தன்னம்பிக்கை தான் என் கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன். அதனால் தான் அவரது எவர்கிரீன் வரிகளான ‘டண்டணக்கா’ என்கிற வரிகளையும், அவரையும் சேர்த்து இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம். எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாக குறிப்பிடவில்லை. அவரை பெருமை படுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. நான் எப்போதுமே எந்த விதமான கருத்து மோதல்களிலும் சிக்கியதில்லை. எங்க அப்பா, அம்மாவுக்கு எப்படி செல்லப் பிள்ளையாக இருக்கிறேனோ அதே மாதிரியே எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப் படுகிறேன்.
அதனால் தயவு செய்து இந்த பாடலை யாரும் ரீமிக்ஸ் செய்து தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களை புண்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேடடுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - புதிய டிரைலர்


;