கமல், சிவகார்த்திகேயன் படங்களை வாங்கிய ஜீ டிவி!

கமல், சிவகார்த்திகேயன் படங்களை வாங்கிய ஜீ டிவி!

செய்திகள் 13-Mar-2015 10:33 AM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ மற்றும் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘உத்தம வில்லன்’. ரமேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இப்படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இப்படத்தை உலகம் முழுக்க வெளியிடும் உரிமையை பிரபல ஈராஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் இன்னொரு படம் ‘ரஜினி முருகன்’. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். இந்தப் படமும் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் விநியோகம் செய்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த 2 படங்களின் சாட்டிலைட் உரிமையை ZEE TV (தமிழ்) நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - டிரைலர்


;