தன்ஷிகா கையில் 5 படம்... ரிலீஸ் எப்போது?

தன்ஷிகா கையில் 5 படம்... ரிலீஸ் எப்போது?

செய்திகள் 13-Mar-2015 10:19 AM IST Chandru கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பெரிதாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை தன்ஷிகா. ஆனால், அதன்பிறகு அவருடைய நடிப்பில் வெளிவந்த ஒரே படம் ‘யா யா’ மட்டுமே. அந்தப் படம் வெளிவந்தும் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. என்னதான் ஆச்சு தன்ஷிகாவுக்கு என விசாரித்தால், விரலுக்கு ஒன்றாக ஒரு கையளவுக்கு படங்களை வைத்துக் கொண்டு சத்தமில்லாமல் பிஸியாகத்தான் இருக்கிறார் தன்ஷ்.

கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு ஆகியோர் நடிப்பில் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக தயாரிப்பிலேயே இருக்கும் ‘விழித்திரு’ படத்தில் நாயகியாக தன்ஷிகாதான் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு தற்போது போய்க்கொண்டிருக்கிறது. அனேகமாக ஜூலை மாதம் ‘விழித்திரு’ வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

‘கீதாரி’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கிட்ணா’ படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தன்ஷிகா. இவர்களுடன் இப்படத்தில் ‘சாட்டை’ மஹிமா, அகிலா கிஷோர், சூரி, கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள். தன்ஷிகாவுக்கு இப்படத்தில் கிராமத்துப் பெண் வேடம்.

இந்த 2 படங்கள் தவிர, குறும்பட இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ‘காத்தாடி’, 3 நபர்களுக்கிடையே ‘பப்’ ஒன்றில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாகிவரும் ‘திறந்திடு சீசேம்’, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வைபவுக்கு ஜோடியாக ஒரு படம் என மொத்தம் 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தன்ஷிகா. இந்த 5ல் 3 படங்களாவது இந்த வருடத்திற்குள் வெளிவரும் என நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார் அம்மணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;