‘திருசியம்’ பட நடிகை நடித்திருக்கும் பரஞ்சோதி!

‘திருசியம்’ பட நடிகை நடித்திருக்கும் பரஞ்சோதி!

செய்திகள் 12-Mar-2015 4:16 PM IST VRC கருத்துக்கள்

காதல், உறவுகளை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதையும், உறவுகள், காதலையும், காதலர்களையும் எப்படியெல்லாம் சிதைக்கிறார்கள் என்பதையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘பரஞ்சோதி’. ‘ஐ.பி.எல்.சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் என் லட்சுமணன் தயாரித்துள்ள இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி கோபு பாலாஜி இயக்கியுள்ளார். 1990-களில் நடப்பது மதிரியான இக்கதையில் ஹீரோவாக சாரதி நடிக்க, ஹீரோயினாக திருசியம் பட புகழ் அன்ஷிபா நடித்துள்ளார். இவர்களுடன் விஜயகுமார், கஞ்சா கருப்பு, கீதா, மயில்சாமி, சிங்கமுத்தும் முத்துக்காளை, மீரா கிருஷ்ணன், போஸ் வெங்கட், பாலாசிங் என பலர் நடித்துள்ளனர். சபேஷ் முரளி இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடந்தது.

பாடல் சிடியை இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெளியிட நடிகர் விஜயகுமார் பெற்றுக்கொண்டார். அதற்கு முன்னதாக இவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குனர்கள் பேரரசு, வீ.சேகர், ஆர்.கே.செல்வமணி, இப்படத்தின் பாடல்கள் எழுதியிருக்கும் நா.முத்துக்குமார், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சாரதி, கதாநாயகியாக நடித்திருக்கும் அன்ஷிபா உட்பட பலர் பேசினார்கள். இந்த படத்திற்கு எஸ்.சந்திரசேகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதாகர் படத்தொகுப்பு செய்துள்ளார். கலையை வினோத் கவனித்துள்ளார். விழாவில் திரையிடப்பட்ட சில பாடல்களையும், டிரைலரையும் பார்த்தபோது இப்படம் மண்வாசனை கலந்த ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது என்பதை உணர்த்தியது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;