‘ஜெயம்’ ரவி படத்தின் மூலம் இயக்குனரான தயாரிப்பாளர்!

‘ஜெயம்’ ரவி படத்தின் மூலம் இயக்குனரான தயாரிப்பாளர்!

செய்திகள் 12-Mar-2015 3:42 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா மோத்வானி, பூனம் பஜ்வா முதலானோர் நடித்துள்ள ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ பட நிறுவனம் சார்பாக நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்தை லக்‌ஷமன் இயக்கியுள்ளார்.எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘கள்வனின் காதலி’ படத்தை தயாரித்தவர் என்பதோடு சில படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்தவர் லக்‌ஷ்மன் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒரு சில விளம்பர படங்களையும் இயக்கியுள்ள லக்‌ஷ்மன் இப்போது ‘ஜெயம் ரவி’ நடித்துள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படம் மூலம் இயக்குனராகியிருக்கிறார். இந்தப் படம் குறித்து லக்‌ஷ்மன் கூறும்போது, ‘‘என் வாழ்க்கையில் நான் பார்த்த, என் நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்ளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை தான் இந்த ‘ரோமியோ ஜூலியட்’. படத்தின் முடிவு ஹேப்பியாக இருக்கும்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பாடல் வீடியோ


;