சேரனுக்கு தகவல் கொடுங்கள்... 50,000 ரூபாய் வெல்லுங்கள்!

சேரனுக்கு தகவல் கொடுங்கள்... 50,000 ரூபாய் வெல்லுங்கள்!

செய்திகள் 12-Mar-2015 11:54 AM IST Chandru கருத்துக்கள்

பல தடைகளையும் தாண்டி கடந்த 6ஆம் தேதி சேரனின் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தின் ஒரிஜினல் டிவிடி விற்பனை அமலுக்கு வந்தது. எதிர்பார்த்ததைவிட இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சேரனே அறிவித்துள்ளார். இது ஒருபுறமிருந்தாலும், வழக்கம்போல் திருட்டு டிவிடி விற்பனையும் இன்னொருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

‘ஜேகே’வின் ஒரிஜினல் டிவிடி வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே அதை ‘நெட்’டிலும் பதிவேற்றிவிட்டார்கள். அதோடு ஒரிஜினலுக்கு இணையான தரத்துடன் கூடிய திருட்டி டிவிடி விற்பனையும் ஜோராக நடக்கிறது. இதைத் தடுக்கும் பொருட்டு இயக்குனர் சேரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது, ‘‘இப்படத்தின் டிவிடிகளை திருட்டுத்தனமாக விற்பவர்களை கண்டுபிடித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும்’’ என இன்றைய ஜேகே நாளிதழ் விளம்பரங்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகவல் கொடுத்து சேரனிடம் பரிசை வெல்லுங்கள்... திருட்டு டிவிடியை ஒழிக்க கரம் கொடுங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வர் சுந்தரம் - டீசர்


;