சிம்பு படம் விர்ர்ர்.... விக்ரம் படம் நவம்பரில்! - கௌதம் பிளான்

சிம்பு படம் விர்ர்ர்.... விக்ரம் படம் நவம்பரில்! - கௌதம் பிளான்

செய்திகள் 12-Mar-2015 10:59 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து சிம்பு, பல்லவி சுபாஷ் நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை தற்போது பிஸியாக இயக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். ஆக்ஷன், காதல் என இரண்டு கலந்த கலவையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளை ஜெட் வேகத்தில் முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் கௌதம். ஜூலைக்குள் இப்படம் திரைக்கு வரும் என்கிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்க வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் ‘10 எண்றதுக்குள்ள...’ படத்தில் பிஸியாக இருக்கிறார் விக்ரம். இதனைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை 3 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்த 2 படங்களும் முடிந்ததும், கௌதம் மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் நவம்பர் மாதம் முதல் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் விக்ரம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;