‘ரோமியோ ஜூலியட்’டிற்காக இயற்கை தந்த வரம்!

‘ரோமியோ ஜூலியட்’டிற்காக இயற்கை தந்த வரம்!

செய்திகள் 12-Mar-2015 10:32 AM IST Chandru கருத்துக்கள்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி, பூனம்பாஜ்வா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோர் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படம் குறித்து பேசிய இயக்குனர் லஷ்மண்...

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது தாமரை எழுதிய பாடலான “தூவானம் தூவத் தூவ... மழைத்துளியில் உன்னை கண்டேன்..." என்ற பாடலை படாமக்க நாங்கள் ஆயத்தமானோம். ஆனால் Rain Effect எதையும் நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. சாதாரணமாகத் தான் எடுக்க நினைத்தோம். ஆனால் கேமராவை வைத்தவுடன் பாடல் வரிகளுக்கு ஏற்ப இயற்கையே மழையை வரவழைத்தது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்ப தமிழகமெங்கும் "டன்டனக்கா..." பாடல் செம்ம ஹிட்டாகி இருப்பது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது" என்றார் இயக்குனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;