‘வாலு’வுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த சென்சார் போர்டு!

‘வாலு’வுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த சென்சார் போர்டு!

செய்திகள் 11-Mar-2015 4:41 PM IST Chandru கருத்துக்கள்

இந்தமுறை தப்பாது என எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள். ஆம்... ‘வாலு’ வரும் 27ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று ‘வாலு’ படம் சென்சாருக்குச் சென்றது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், இப்படம் எல்லோரும் பார்க்கும் வகையில் இருப்பதால் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘வாலு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் காமெடிக்கு சந்தானம் சேர்க்கப்பட்டிருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையில் உருவான பாடல்கள் பல மாதங்களுக்கு முன்பே வெளிவந்து ஹிட்டாகி உள்ளன.

நீண்டநாட்களுக்குப் பிறகு சிம்பு படம் வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தின் ரிசல்ட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;