பிரபுதேவா இயக்கும் ‘USA ரோடு டிராவல்’ படத்தில் விஜய்?

பிரபுதேவா இயக்கும் ‘USA ரோடு டிராவல்’ படத்தில் விஜய்?

செய்திகள் 11-Mar-2015 11:50 AM IST Chandru கருத்துக்கள்

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் தனது 58வது படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ‘இளையதளபதி’ விஜய். இதனையடுத்து அட்லீ இயக்கும் படமொன்றில் விஜய் நடிக்க இருப்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த 2 படங்களும் முடிவதற்கே எப்படியும் இந்த 2015ஆம் ஆண்டு கடந்துவிடும். ஆனால், விஜய் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான செய்திகள் இப்போதே றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. இயக்குனர்கள் சசிகுமார், ஷங்கர், பிரபுதேவா, கௌதம் மேனன், பிரபுதேவா ஆகியோரின் படங்களில் விஜய் நடிக்கலாம் என வதந்திகள் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கின்றன.

இதில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறும் கதையாம். அதிலும் முழுப்படத்தையும் ‘ரோடு டிராவல்’ படமாக இயக்கவிருக்கிறாராம் பிரபுதேவா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு அட்லீ படத்திற்குப் பிறகு ஆரம்பமாகும் என்கிறது மேற்கொண்ட அந்த அதிகாரபூர்வமில்லாத தகவல்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;