ஒரே ஜோடிக்கு அடுத்தடுத்த வாரங்களில் 2 படங்கள்!

ஒரே ஜோடிக்கு அடுத்தடுத்த வாரங்களில் 2 படங்கள்!

செய்திகள் 11-Mar-2015 11:40 AM IST VRC கருத்துக்கள்

’பெங்களூர் டேஸ்’ படத்தை தொடர்ந்து துல்கர் சல்மானும், நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ள மலையாள படம் ‘100 டேஸ் ஆஃப் லவ்’. ஜெனுஸ் முகமத் இயக்கியுள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து இப்படம் இம்மாத இறுதியில் ரிலீசாகவிருக்கிறது. ‘பெங்களூர் டேஸ்’ மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து துல்கர் சல்மான், நித்யா மேனன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள இப்படம் மோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஜோடியாக நடித்து, மணிரத்னம் இயக்கியுள்ள ‘ஓகே கண்மணி’யும் ஏப்ரல் மாதம் ரிலீசாகவிருக்கிறது. இப்படம் சென்னை பின்னணியில் சொல்லப்படும் காதல் கதை என்று கூறப்படுகிறது. ‘100 டேஸ் ஆஃப் லவ்’ படமும் காதல் கதையாம்! இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ரிலீசாகவிருப்பதால் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள் துல்கர் சல்மானும், நித்யா மேனனும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - அழகியே லிரிக் வீடியோ


;