இந்த வெள்ளிக்கிழமை 9 நேரடி தமிழ் படங்கள்!

இந்த வெள்ளிக்கிழமை 9 நேரடி தமிழ் படங்கள்!

செய்திகள் 11-Mar-2015 11:03 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரத்துக்கு வாரம் ஏராளமான படங்கள வெளியாகி கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்-6) 6 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து இந்த வராம் வெள்ளிக் கிழமை (மார்ச்-13) 9 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அந்தப் படங்கள் வருமாறு! 1.தண்ணில கண்டம், 1.வானவில் வாழ்க்கை, 3. மகாபலிபுரம், 4.ஐவராட்டம், 5. இரவும் பகலும் வரும், 6.கதம் கதம், 7.தவறான பாதை, 8.சொன்னாப் போச்சு, 9.ராஜதந்திரம் ஆகிவவை தான்! இந்த படங்கள் தவிர புதிய தொழிநுட்பத்தில் மறுவெளியீடாக ‘சங்கராபரணம்’ என்ற படமும் ரிலீசாகிறது.

திருட்டு விசிடி, திரைப்பட தயாரிப்பு செலவு அதிகம் என்ற சில பிரச்சனைகளை இருந்து வரும் நிலையிலும் தயாராகும் படங்களின் எண்ணிக்கைக்கு ஒன்றும் குறைவில்லை! ஆனால் இப்படி வெளியாகும் படங்களில் எத்தனை படங்கள் முதலீட்டை திரும்பப் பெறுகின்றன, எத்தனை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் லாபம் பார்க்கிறார்கள் என்றால் அது சொல்லக் கூடிய வகையில் இல்லை என்பது தான் நிஜம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதம் கதம் பற்றி நடிகர் ஜீவா - வீடியோ


;