ஹாட்ரிக் கூட்டணி அமைக்கும் ‘பில்லா’ டீம்!

ஹாட்ரிக் கூட்டணி அமைக்கும் ‘பில்லா’ டீம்!

செய்திகள் 11-Mar-2015 10:48 AM IST Chandru கருத்துக்கள்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து 2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘பில்லா’ படத்தின் ஹிட் கூட்டணி 2013ஆம் ஆண்டு ‘ஆரம்பம்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. இந்த வெற்றிக்கூட்டணி தற்போது ‘ஹாட்ரிக்’ அடிக்க இருக்கிறது. ஆம்... விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவர்களுடன் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்த ஆர்யாவும் இந்த புதிய படத்தில் இணையவிருக்கிறார். இப்படத்தை ஐயங்கரன் அல்லது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஆர்யா, கிருஷ்ணா இணைந்து நடிக்கும் ‘யட்சன்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்தன். அதேபோல் ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் புதிய படமொன்றில் நடிப்பதற்கான வேலைகளில் அஜித்தும் பிஸியாக இருக்கிறார். இந்த இரண்டு படங்களும் வரும் அக்டோபருக்குள் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. அதன் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவிருக்கும் படத்திற்கான படப்பிடிப்பு நவம்பரில் துவங்கும் என விஷ்ணுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;